அந்நியனின் ஆட்சிக்குள்
இருநூறு ஆண்டுகள் ...
அடங்கி இருந்தது
இந்த நாடு .
1947ஆகஸ்ட் 15-ல்
ஆங்கிலேயன் வெளியேறினான்
அது சுதந்திர தினம்.
ஆயினும் ,
ஆக்கிரமிப்பாளணின் சட்டமே
நாட்டை நிர்வகித்தது
அடக்கு முறையின்
அடிமைத்தனம் காத்து
சாதிய சணாதனங்களோடு
சமரசமாகி
மானுட சமத்துவத்தை மறுக்கும்
அந்நியச் சட்டங்களை
அப்புறப்படுத்தி விட்டு
அம்பேத்கர் வரைவு செய்த
அரசியல் சாசனம்
அரியணை ஏறிய நாள்
1950, சனவரி 26
இது குடியரசு தினம் .
ஆகஸ்ட் - 15
ஆக்கிரமிபாளனிடமிருந்து
மண் விடுதலை ,
சனவரி - 26
அந்நிய ஆட்சிமுறைலிருந்து
மக்கள் விடுதலை.
சுதந்திர தினம்
காந்தியைச்
சொந்தம் கொண்டாடுமென்றால்
குடியரசு தினம்
அம்பேத்கரையே
மையம் கொண்டாக வேண்டும்.
ஆனால்
இந்திய ஆட்சியாளர்கள்
இப்படித்தான் குடியரசு தின விழாவை
கொண்டாடுகிறார்களா ?
சுகந்திர தினத்தில்
காந்திக்கு
காவடியெடுகிறார்கள்.
குடியரசு தினத்திலோ
அம்பேத்கரை
அடியோடி மறைக்கிறார்கள் ..
இது ஏன் ?
அம்பேத்கரின் தேசிய சாதனையைக்கூட
அங்கீகரிக்க மறுப்பது ஏன் ?
அதே கும்பல்
அரசியல் சாசனத்தையும்
மாற்றவேண்டுமென
அடம்பிடிப்பது ஏன் ?
அம்பேத்கரின் அடையாளங்கைக் கண்டு
எரிச்சலடைவதற்கும் ,
அரசியல் சாசனத்தை
மாற்றவேண்டுமென
ஆத்திரம் கொள்ளுவதற்கும் ,
ஒரேயொரு காரணம் தான்
இருக்க முடியும் !
இந்துத்துவ மத வெறிக் கும்பலின்
மமதையை அடக்கும்
மாபெரும் கடிவாளமாய்,
அரசியல் சாசனத்தை
அம்பேத்கர் வளைத்திருகிறார்
என்பதே அது !
சிந்தனை செல்வன்
பொதுசெயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
No comments:
Post a Comment